Tamilnadu

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: திருநாவுக்கரசு, சபரிராஜன் தாயார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த சம்பத்தின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனின் தாயார் லதா, பரிமளா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், “ திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோரை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும். குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறபித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை” என மனுவில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு, 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.