Tamilnadu

‘தமிழாற்றுப்படை’யின் நிறைவுக் கட்டுரை - தந்தை பெரியாரை ஆய்வு செய்யும் வைரமுத்து!

தமிழுக்கு முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளாகக் கவிப்பேரரசு வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார்.

இதுவரை தொல்காப்பியர், அவ்வையார், கபிலர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், செயங்கொண்டார், கம்பர், அப்பர், ஆண்டாள், திருமூலர், வள்ளலார், உ.வே.சாமிநாதையர், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், கலைஞர், மறைமலையடிகள், புதுமைப்பித்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன், அப்துல் ரகுமான், பேரறிஞர் அண்ணா என 23 ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளை அரங்கேற்றியிருக்கிறார்.

Poet Vairamuthu

‘தமிழாற்றுப்படை’ வரிசையின் நிறைவுக் கட்டுரையாக, 24-ம் ஆளுமையாக தந்தை பெரியாரை ஆய்வு செய்து திருச்சியில் இன்று மாலை அரங்கேற்ற இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு ‘தமிழாற்றுப்படை’யின் இறுதி நிகழ்வு நடைபெறுகிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, பேராசிரியர் அருணன் ஆகியோர் இந்த விழாவில் உரையாற்ற இருக்கின்றனர்.