Tamilnadu
“10 குழந்தைகளை வாங்கிக் கொடுத்தேன்” - கைதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிர்ச்சி தகவல்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், கொல்லிமலை பகுதியில் 10 குழந்தைகளை வாங்கி அமுதாவிடம் விற்றதாக ஒப்புதல் அளித்துள்ளார்.
செவிலியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதா, குழந்தை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மருத்துவர், செவிலியர் உட்பட 3 பேர் கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் நாமக்கல் பகுதி மருத்துவமனை தகவல்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
விசாரணையின்போது அமுதா கொடுத்த தகவல்களின் அடிப்படையில் குழந்தைகளை பேரம் பேசி விற்ற செவிலியர் பர்வீன், குழந்தைகளை வாங்கிக் கொடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், கொல்லிமலை பகுதியில் 10 குழந்தைகளை வாங்கி அமுதாவிடம் விற்றதாக ஒப்புதல் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், இதில் இன்னும் பலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
Also Read
-
ரூ.1,248.24 கோடியில் 10 சாலைகள், 2 மேம்பாலங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகள் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
-
87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவை தொடக்கம்! - முழு விவரம் உள்ளே!
-
கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா! : மும்முரமாக நடைபெறும் பணிகள்!
-
“இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!