Tamilnadu

ஜெயலலிதா மரணம் குறித்தும் விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை - உச்ச நீதிமன்றம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டதுதான் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, அப்போது பதவியில் இருந்த அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகிறது ஆறுமுகசாமி ஆணையம்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சமர்பித்துள்ள அறிக்கைகளை ஆறுமுகசாமி ஆணையம் தவறாக புரிந்துக்கொண்டதால் தனி மருத்துவக் குழு அமைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அப்பல்லோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தை நாடியது.

அப்பல்லோ வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ ரீதியாக விசாரிக்க 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் எனவும் அதற்கு பின்னரே ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை நடத்த வேண்டும் எனவும் அப்பல்லோ நிர்வாகம் வாதாடியது.

இதனையொட்டி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்தும், அப்பல்லோவின் கோரிக்கையை பரிசீலப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.