Tamilnadu
வாக்காளர் பட்டியலில் பெயரில்லாமல் வாக்களித்த சிவகார்த்திகேயன் !
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர். இவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர் ஆவார்.
ஆனால், தேர்தல் அதிகாரிகளுடன் பேசியதை அடுத்து, சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, நடிகர் சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்துள்ளார். அவரை வாக்களிக்க அனுமதித்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களிக்கவில்லை; அவருடைய விரலில் மை மட்டும்தான் வைத்துள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனை நாளை நடைபெற உள்ளது. ஆலோசனையில் தேர்தல் அதிகாரி, தேர்தல் டிஜிபி, காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
மதுரை விவகாரம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தேர்தல் ஆணையத்தில் இன்று அறிக்கை அளிப்பார். அந்த அறிக்கையானது, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!