Tamilnadu
“மக்கள் விரோத ஆட்சிக்கு பாடம் புகட்டுவோம்” - கி.வீரமணி அறிக்கை!
எட்டு வழிச்சாலை, மீத்தேன், நீட் போன்ற மக்கள் விரோத திட்டங்களைக் கொண்டு வந்த மத்திய - மாநில அரசுகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ‘உண்மை ஒருநாள் வெளியாகும்; அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்’ என்கிற பட்டுக்கோட்டையாரின் வரிகளுக்கேற்ப விரைவில் இந்த மக்கள் விரோத மத்திய - மாநில அரசுகளின் ஆட்சி முடிவுக்கு வரும்.
பிரதமர் மோடி, அம்பானி குழுமத்திற்குத் தனிச் சலுகை காட்டியது எந்த விதத்தில் சரி ? அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை புறக்கணித்து விமான தொழில்நுட்பத்தில் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது ஏன் ?
அதேநேரம் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆணவத்துடன் 5 மாவட்ட விவசாயிகளின் கண்ணீரையும் பொருட்படுத்தாமல் 8 வழிச்சாலை என்கிற திட்டத்தை கொண்டு வந்தார். அதற்கு காவல்துறையை ஏவல்துறையாக்கி, நியாயமான வழியில் போராடிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவினார்.
இப்படி எல்லாம் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் மோடி - எடப்பாடி கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப நாள் நெருங்கி வருகிறது. தமிழக மக்கள், விவசாயிகள் இந்த ஆட்சியை தூக்கி எறிய முடிவு செய்துவிட்டார்கள். இன்னும் 4 நாட்கள்தான் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!
-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் பாலியல் குற்றச்சாட்டு : போராடிய மாணவர்கள் மீது தடியடி!
-
25 ஆண்டுகள் - பிரதமர் மோடியின் அடையாளம் இதுதான் : முரசொலி தலையங்கம்!