Sports
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
67இந்திய இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்து உலக கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இலங்கை, தம்புள்ளாவில் உள்ள தம்புள்ளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூன் 21) நடைபெற்ற இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய 15 வயதான இந்திய தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தொடக்கம் முதலே இலங்கை பந்துவீச்சாளர்களை அடித்தாட தொடங்கினார்.
அவரது முதல் 11 பந்துகளில் 4, 4, 4, 6, 6, 0, 6, 4, 4, 6, 6 என மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய, வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்தார்.
இதன்மூலம், 2005 ஆம் ஆண்டு இலங்கை வீரர் கவுஷல்ய வீரரத்னே 12 பந்துகளில் பதிவு செய்திருந்த முந்தைய சாதனையை வைபவ் முறியடித்தார்.
இலங்கை இடதுகை வேகப்பந்துவீச்சாளர் துலாஜ் சமுதிதாவின் பந்தை நேராக சிக்ஸருக்கு விளாசியபோது இந்தச் சாதனையை சூர்யவன்ஷி நிகழ்த்தியுள்ளார். அந்த சிக்ஸர் மூலம் தனது ஐந்தாவது சிக்ஸரை பதிவு செய்த வைபவ், புதிய உலக சாதனையையும் படைத்தார்.
இதற்கு முன்பு இந்த தொடரில் 14, 44, 21 மற்றும் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த வைபவ், இறுதிப்போட்டியில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, மூன்றாவது ஓவரில் முகமது ஷிராஸ் வீசிய ஓவரில் மட்டும் 26 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 29 பந்துகளில் 94 ரன்கள் (10 பவுண்டரி, 8 சிக்சர்கள்) குவித்து ஆட்டமிழந்தார். அவரது இந்த அதிரடி இன்னிங்ஸ் இந்திய ஏ அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்ததுடன், லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூர்யவன்ஷி 94 ரன்களும், திலக் வர்மா 67 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களும் குவித்தனர்.
இலங்கை அணி சார்பில் குகதாஸ் மதுலன், ரவிந்து ஃபெர்னாண்டோ, வனுஜா சாகன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!