Sports
”மிரட்டல்.. மிரட்டல்.. மிரட்டலடி.. அதிரடி காட்டிய பஞ்சாப் கிங்ஸ்! திகைத்துப்போன டெல்லி” - முழு விவரம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 35 ஆவது லீக் போட்டியாக பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (ஏப்.25) நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 67 பந்துகளில் 16 சிக்சர்கள் 9 பவுண்டரிகளுடன் 152 ரன்கள் எடுத்தார்.
இந்த ஸ்கோரின் மூலம் கே.எல்.ராகுல் தனிப்பட்ட முறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி, ஐபிஎல் தொடரில் தனது 6வது சதத்தை பதிவு செய்தார் கேஎல் ராகுல்.
ஐபிஎல் தொடரில் அதிக(6) சதம் அடித்த 3வது வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை சமன் செய்தார்.
ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் 150 ரன்களை(152) கடந்த 3வது வீரர் மற்றும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் அதிக(25) பவுண்டரிகள் (4S + 6S) அடித்த 2வது வீரர் மற்றும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இவருடன் பெரிய பார்ட்னர் ஷிப் அமைத்து நிதானமாக அதிரடி காட்டிய நிதிஸ் ரானா 91 ரன்கள் குவித்தார். அதிகமான ஸ்கோர் என்பதால் டெல்லி அணி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் இருந்ததாகவே கருதப்பட்டது.
ஆனால், 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் – பிரியன்ஷ் ஆர்யா அதிரயாக ரன்கள் குவித்து பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.
6.5 ஓவர்களில் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாடினர். ஆர்யா 42 ரன்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரப்சிம்ரன் சிங் 26 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் அணி வீரர்கள் கூப்பர் கொனோலி 17 ரன்னிலும், நேகல் வதே 25 ரன்களிலும் ஆட்டமிழந்தபோது பஞ்சாப் அணி சற்று தடுமாற்றம் அடைந்தது. இருப்பினும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 சிக்சஸர்களுடன் 71 ரன்கள் குவித்தார்.
அவருக்கு உறுதுணையாக சஷாங்க் சிங் 19 ரன்கள் சேர்க்க 18.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 265 ரன்கள் என்ற இலக்கை எளிதாக கடந்து வெற்றி பெற்றது. முன்னதாக 2024-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக இதே பஞ்சாப் அணி 262 ரன்களை சேஸிங் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளது பஞ்சாப் அணி.
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ததன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று (ஏப்.25) புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயித்த 265 ரன்கள் என்ற இமாலய இலக்கை, பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிகரமாக எட்டிப்பிடித்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கு முன் 2024-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணிக்கு எதிராக இதே பஞ்சாப் கிங்ஸ் அணி 262 ரன்களை சேஸிங் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!