Sports
CSK அதிர்ச்சி தோல்வி… தோனி இல்லாமல் கரை சேருமா? எமோஷனலான ஜடேஜா - முழு விவரம் உள்ளே!
2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 28ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் தொடக்கப்போட்டியில் சன்ரைசஸ் ஹைத்ராபாத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இதற்கடுத்து 2வது போட்டியில் மும்பை அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில், நேற்று (மார்ச் 30) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையே 3வது போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் சொதப்பல் தொடக்கம் கொடுத்தனர். சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 6 ரன்களும், ருதுராஜ் 11 பந்துகளில் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதற்கடுத்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் இறங்கிய மேட் ஷார்ட் 2 ரன்கள், சர்ஃபராஸ் கான் 17 ரன்கள், கார்த்திக் சர்மா 18 ரன்கள் மற்றும் ஷிவம் துபே 6 ரன்கள் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 36 பந்துகளில் 2 சிக்சர்களுடன், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது சிஎஸ்கே அணி. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசி ஆர்ச்சர், பர்கர் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 128 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி ஜோடி அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதில் ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 38 ரன்களும், சூர்யவன்ஷி 17 பந்துகளில் 58 ரன்களும் விளாசினர்.
இறுதியாக 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 128 ரன்கள் குவித்து இலக்கை எட்டியது ராஜஸ்தான் அணி. இந்த வெற்றியின் மூலம் 4.90 என்ற ரன் ரேட்டில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
குறிப்பாக சிஎஸ்கே அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு டிரேட் செய்யப்பட்ட அதிரடி ஆல் ரவுண்டர் ஜடேஜா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும் சிஎஸ்கே அணி தடுமாறுவதை போட்டியின் நடுவே கண்ட ஜடேஜாவின் கண்கள் கலங்கியதாக காணொளி ஒன்று வேகமாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. பின்னர், போட்டி முடிந்தவுடன் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் கலீல் அகமது டி சர்ட்டில் ஜடேஜா முத்தம் கொடுத்தது சிஎஸ்கே ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியும் நிலையான அணி இல்லாமல் தவிக்கிறதா சிஎஸ்கே அணி என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அணியின் முக்கிய தூணாக கருதப்படும் எம்.எஸ்.தோனியும் காயம் காரணமாக அணியுடன் 2 வாரங்களுக்கு இருக்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான காம்பினேஷனுடன் தான் சிஎஸ்கே அணி செயல்படுகிறதா? போன்ற பல்வேறு கேள்விகளை முதல் போட்டியின் முடிவிலேயே எழுப்பியுள்ளது.
Also Read
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!
-
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்னும் Dance Fightதான் போடல” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
-
“தோல்விப் பயத்தால் ரூ.10,000 கொடுக்கம் த.வெ.க” : தேர்தல் ஆணையத்தில் என்.ஆர்.இளங்கோ புகார் மனு!
-
“புதுச்சேரி - கொலைச்சேரி ; திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் : ஆடவர் டி20 கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா.. பந்தாடப்பட்ட பாகிஸ்தான்!