Sports
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி: இந்திய அணியில் மாற்றம் நிகழுமா? அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி முதல் நடந்து வருகிறது. லீக் சுற்று ஆட்டத்தின் அடிப்படையில் மொத்தம் உள்ள 20 அணிகளில், ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள 5 அணிகளில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் என 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
இந்த 8 அணிகளும் 2 குரூப்புகளாக பிரிக்கப்பட்டு தலா 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியுடன் நேற்று (பிப்ரவரி 22) மோதியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய தென் ஆப்பிரிக்கா அணி அதிரடியாக ஆடி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் சற்று தடுமாறினாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ப்ரெவிஸ், மில்லர் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோர் அதிரடியாக பார்ட்னர் ஷிப் அமைத்து ஆடினர். ப்ரெவிஸ் 29 பந்துகளில் 3 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்களை குவித்தார். மறுபக்கம் மில்லர் 35 பந்துகளில் 3 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 63 ரன்களும் மற்றும் ஸ்டப்ஸ் 24 பந்துகளில் 3 சிக்சர்கள், 1 பவுண்டரிகளுடன் 44 ரன்களை குவித்தார்.
பின்னர் 188 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே சொதப்பல் ஆட்டம் ஆடியது. இஷான் கிஷன் 0, அபிஷேக் சர்மா 15, திலக் வர்மா 1 ரன், சூர்யகுமார் 18 ரன்கள் மற்றும் வாஷிங்டன் சுந்தர் 11 ரன்கள் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய ஷிவம் துபே 37 பந்துகளில் 3 சிக்சர்கள், 1 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் அதிகபட்சமாக அடித்தார்.
இறுதியில் 18.5 ஒவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி மூலம் இந்திய அணியின் ரன் ரேட் விகிதமும் பலத்த அடி வாங்கியுள்ளது. லீக் ஆட்டத்தில் நன்றாக விளையாடி வந்த இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் படு சொதப்பலாக ஆடியுள்ளது.
இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா இந்த தொடர் முழுவதுமே ரன் கணக்கே தொடங்காமல் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மட்டுமே 15 ரன்கள் அடித்துள்ளார். இதனால் மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் ஒருபுறம், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மறுபுறம் என குரல்கள் கொடுத்து வருகின்றனர்.
அடுத்த 2 ஆட்டங்களிலும் கட்டாயம் நல்ல ரன் ரேட்டில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி இருக்கும் நிலையில், இந்திய அணியில் மாற்றம் ஏற்படுமா என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்திய அணிதான் கோப்பையை கைப்பற்றும் என ஆருடம் தெரிவித்த பலரும் தற்போது இந்திய அணிக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அடுத்த ஆட்டம் இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து ஜிம்ப்பாவே அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி கட்டாயம் வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Also Read
-
“உங்கள் தூக்கத்தை கெடுத்த surgical strike” - பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!
-
“மாணவர் நலனில் அக்கறை இருப்பதுபோல், நீலிக்கண்ணீர் வடிக்கும் அன்புமணி” : அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!
-
கொளத்தூர் : 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பாட்டாக்கள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“எல்லோருக்கும் இது பிப்ரவரி மாதம்! ஆனால், திமுக-வுக்கு இது ‘மாநாடு மாதம்!’” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!