Sports
எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி: இலங்கை சென்றடைந்த இந்திய அணி! - முழு விவரம்
டி20 உலகக்கோப்பை 2026ன் லீக் சுற்றுகள் தற்போது இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் மிகவும் சிறிய அணிகளாக கருதப்பட்ட நேபால், நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாவே அணிகள் உலகத்தரமான அணிகளுக்கு கடும் சவாலை அளித்து வருகிறது.
தற்போது இந்தத்தொடரில் முக்கியமான போட்டியாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாளை (பிப்ரவரி 15) கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ளது. வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே இருக்கும் எதிர்பார்ப்பு இந்த முறை சற்று அதிகமாகவே உள்ளது காரணம், உலகக்கோப்பைக்கு முன்பு வரை பாகிஸ்தான் அணி இந்தத் தொடரில் பங்கேற்குமா பலத்த சந்தேகம் இருந்து வந்தது.
வங்கதேச அணி டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியும் தொடரில் பங்கேற்பதை உறுதி செய்யாமல் வங்கதேசத்துக்கு ஆதரவாக செய்யப்பட்டு வந்தது. அதன்பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு நிபந்தனைகளை ஐசிசி-க்கு விதித்தது.
குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் நட்பு ரீதியாக இருநாட்டு வீரர்களும் கைகுலுக்கிக்கொள்ள வேண்டும். உலகக்கோப்பையின் வருவாயில் பாகிஸ்தான் அணிக்கான வருவாயை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகளை வைத்திருந்தது.
இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள் நிலவிய நிலையில், இறுதியாக இந்தியாவுடனான ஆட்டத்தில் விளையாட பாகிஸ்தான் அணி ஒத்துக்கொண்டது. எப்போதுமே இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றால் கூடுதல் விறுவிறுப்பும் ரசிகர்களிடையே அதிக ஆர்வமும் இருக்கும் என்பதால், நாளை நடைபெற உள்ள போட்டியிலும் இது பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம் என்று இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கொழும்புவில் நாளை காலை முதல் பிற்பகல் வரை மழை பெய்ய 80 விழுக்காடு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாளை இரவு 7 மணிக்குத் தொடங்க உள்ள சூழலில், மழையால் போட்டி தொடங்குவது தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் போட்டி உறுதி செய்யப்பட்ட நிலையில், மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டதால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, நமீபியாவிற்கு எதிரான போட்டியில் விளையாடாத இந்தியாவின் அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவும் இந்திய அணியுடன் இலங்கை சென்றுள்ளார். அவரது உடல்நலம் குறித்து இந்திய அணி நிர்வாகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
நாளைய போட்டியில் இந்திய அணியில் உத்தேசமாக, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்). ஹர்ஷித் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல் (துணை கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்காக இந்திய வீரர்கள் இலங்கை சென்றடைந்து விட்டனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நாளைய போட்டி இருக்குமா? அல்லது மழை குறுக்கீட்டால் ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை மாலை 7 மணிக்கு தொடங்குகிறது.
Also Read
-
ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!
-
குழந்தைகளின் கல்விக்கு உதவும் உரிமைத் தொகை : முதலமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் சொன்ன மேகலா என்ற பெண் !
-
எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தியா?: பாஜக அமைச்சர் அட்ராசிட்டியால் விழிப்பிதுங்கிய பெண் காவலர்-பின்னணி?
-
ஓமன் நாட்டில் பணிபுரிய அறிய வாய்ப்பு... சம்பளம் எவ்வளவு? என்ன பணி? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம் உள்ளே!
-
“திட்டத்தை முடக்க நினைத்தவரின் சதியை முறியடித்த முதலமைச்சர்...” - முரசொலி பாராட்டு!