Sports
விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகள், ஊக்கத்தொகை... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நடைபெற உள்ள ஏ.டி.பி டென்னிஸ் போட்டிக்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலை மற்றும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.14.48 லட்சம் மதிப்பில் அதிநவீன பந்தய சைக்கிள்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செலவீன தொகைக்கான காசோலைகளை வழங்கி, இந்தியாவின் மதிப்புமிக்க அர்ஜுனா விருது பெற்ற தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (23.01.2025) சென்னையில் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஏ.டி.பி டென்னிஸ் போட்டிக்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 1 கோடிக்கான காசோலை மற்றும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.14.48 லட்சம் மதிப்பில் அதிநவீன பந்தய சைக்கிள்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செலவீன தொகைக்கான காசோலைகளை வழங்கி, இந்தியாவின் மதிப்புமிக்க அர்ஜுனா விருது பெற்ற தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 1 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ் அவர்களிடம் வழங்கினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், ஏப்ரல் 2025-ல் நடைபெற உள்ள எவரெஸ்ட் எக்ஸ்பெடிஷனில் (எவெரெஸ்ட் பயணம்) கலந்து கொள்ள உள்ள தமிழ்நாடு வீரர் யு.ஆஷிஷ் அவர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், தோஹாவில் நடைபெற உள்ள வாள்சண்டை போட்டியில் கலந்து கொள்ள ஸ்ரீ சரவணன் அவர்களுக்கு ரூ.1.40 லட்சத்திற்கான காசோலையும், பன்னாட்டு அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள ஆர். ஷாச்சி சாய் அவர்களுக்கு ரூ.70 ஆயிரத்திற்கான காசோலையும், சைக்ளிங் விளையாட்டு வீரர்களான ஸ்ரீநாத் லட்சுமிகாந்த் மற்றும் பி.பிரதீப் ஆகிய இருவருக்கும் மொத்தம் ரூ. 7,38,403/- செலவில் அதிநவீன பந்தைய சைக்கிள்களையும் வழங்கினார்
இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க விருதான அர்ஜூனா விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அபய் சிங் (ஸ்குவாஷ்), துளசிமதி முருகேசன் (பாரா பேட்மிண்டன்), நித்யா ஸ்ரீ சுமதி சிவன் (பாரா பேட்மிண்டன்) மற்றும் மனிஷா ராமதாஸ் (பாரா பேட்மிண்டன்) ஆகியோருக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
மேலும் இன்றைய நிகழ்வில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி மற்றும் தேசிய அளவிலான கையுந்து போட்டி, இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டு கூட்டமைப்பு (SGFI) நடத்திய 68 வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தேசிய கூடைப்பந்து போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டின் 60 வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!