Sports
கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த மாநில அரசு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !
இந்தியா கால்பந்து அரங்கில் உலகளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், இந்தியாவில் பல்வேறு இடங்களில் கிரிக்கெட்டுக்கு இணையாக கால்பந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும்ம், கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் கிரிக்கெட்டை விட அதிகம் வரவேற்பு பெரும் விளையாட்டாக கால்பந்து இருக்கிறது என்று சொன்னாலும் அது தவறில்லை.
கேரளாவில் அர்ஜென்டினா, பிரேசில், போர்த்துக்கல் ஆகிய அணிகளுக்கு அதிகளவில் கால்பந்து ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் கதாநாயர்களாக கொண்டாடட்பட்டு வருகிறார்கள். கடந்த உலககோப்பையை அர்ஜென்டினா அணி வென்றபோது அது கேரளத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உலகக்கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு கேரள ரசிகர்கள் அளித்த ஆதரவு அர்ஜென்டினா வரை எட்டியது. அதைத் தொடர்ந்து இதற்கு நன்றி செலுத்தும் விதமாக மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு வரும் என தகவல் வெளியானது.
கேரளாவுக்கு நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட வருமாறு அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தை கேரள அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், உலகக்கோப்பையை வென்ற மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு வருவது உறுதியாகியுள்ளது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துரஹிமான், " உலகக்கோப்பையை வென்ற அணியும், உலகின் நம்பர் 1 கால்பந்தாட்ட அணியான அர்ஜெண்டினா, அடுத்த ஆண்டு கேரளாவில் விளையாட உள்ளது உறுதியாகியுள்ளது. இதில் மெஸ்ஸியும் விளையாட உள்ளார். இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா உடன் விளையாடும் எதிரணி மற்றும் போட்டி நடைபெறும் மைதானம் குறித்த அறிவிப்பு முடிவு செய்யப்படும்" என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!