Sports
சுப்மான் கில்லுக்கு காயம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் மற்றுமொரு தமிழக வீரருக்கு வாய்ப்பு ?
உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் இடம்பிடித்திருந்தார். அதில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஏ அணிகள் பங்கேற்ற எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அங்கும் தனது திறமையை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் தொடர்ந்து உள்ளுர் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.இதனால் அவருக்கு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் வாய்ப்பு வழஙகப்பட்டது.அதிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
பின்னர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 6-ம் இடம் பிடித்தார். தொடர்ந்து அடுத்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக சாய் சுதர்சன் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் -கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்கான அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாய் சுதர்சனம் ஆஸ்திரேலிய A அணிக்கு எதிரான இந்திய A அணியில் இடம்பிடித்திருந்தார்.
அதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி அசத்தியிருந்தார். இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய அணி அங்கு பயிற்சி போட்டியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சுப்மான் கில்லுக்கு இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதில் முதல் டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ஏற்கனவே அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரண்டு தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!