Sports
சாம்பியன்ஸ் டிராபி தொடர் : இந்தியா பங்கேற்கவில்லை என்றால், தொடரை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு ?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ள நிலையில், அது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. இதனால் அடுத்து பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி தற்போது பரபரப்பாக எழுந்த நிலையில், அந்த தொடருக்கான ஏற்பாடுகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் இந்த தொடரில் இந்தியா பங்கேற்காது என்றும், இந்திய அரசு அதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்ததாகவும் ஐசிசிக்கு பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தியா மோதும் போட்டிகளை மட்டும் பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
அதே நேரம் இந்தியாவின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தியாவின் முடிவை பாகிஸ்தான் ஏற்க மறுத்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடரையே வேறு நாட்டில் நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளதாகவும், ஒருவேளை அப்படி நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!