Sports
“தமிழ்நாட்டில் மட்டும் 30 கிராண்ட் மாஸ்டர்ஸ் உருவாகியுள்ளனர்” - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, விளையாட்டுத்துறையில் பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை உலகமே உற்று நோக்கும் வகையில் தற்போது விளங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து பல முன்னேற்றம் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்-2024 போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த நவ.5-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி (இன்று) வரை இந்த போட்டி நடைபெற்றது.
மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என்று இரு பிரிவில் நடந்த இந்த போட்டியில்,
* மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் எரிகைசி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உள்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்களும்,
* சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி, வி. பிரணவ், எம். பிரனேஷ் மற்றும் ஆர்.வைஷாலி போன்ற 8 இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் விளையாடினர்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற 7 சுற்றுகளில் மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் (மாஸ்டர்ஸ் பிரிவு), பிரணவ் ( சேலஞ்சர்ஸ் பிரிவு) ஆகிய வீரர்கள் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
இந்த போட்டியின் நிறைவு விழா இன்று (நவ.11) சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் 2024 மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரத்திற்கு ரூ.15 லட்சத்திற்கான பரிசுத் தொகையினை வழங்கினார். தொடர்ந்து முதல்முறையாக நடத்தப்பட்ட சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்ற பிரணவிற்கு 6 லட்சம் ரூபாய் பரிசு தொகையினை வழங்கப்பட்டது.
தொடர்ந்து FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். குறிப்பாக பிரணவ் அடுத்த ஆண்டு நடைபெறும் சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் மாஸ்டர் பிரிவில் நடைபெறும் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். மேலும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதனிடையே மேடையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரத்திற்கும், சாலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவிற்கும் பாராட்டுகள்.
விளையாட்டு துறையில் முதலமைச்சர் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து விளையாட்டு வீரர்களுக்கு முழுமையான உதவிகளை மேம்படுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி விளையாட்டுத்துறை தமிழ்நாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தேசிய அளவைக் கடந்து, சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது தமிழ்நாடு விளையாட்டுத்துறை.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷ் எலைட் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளார். உலக செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கி அரசு பாராட்டியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. விளையாட்டு வீரர் - வீராங்கனைகளை ஊக்குவித்து வருகிறது.
இத்தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் 2780 புள்ளிகளைப் பெற்று அரவிந்த் சிதம்பரம், தனது கெரியரின் உச்சத்தை அடைந்துள்ளார். மொத்தமாக தமிழ்நாட்டில் மட்டும் 30 கிராண்ட்மாஸ்டர்ஸ் உருவாகியுள்ளனர். செஸ் போட்டியின் மீது ஆர்வம் கொண்டு இந்த போட்டிகளை நேரில் பார்க்க வந்த 3500 பார்வையாளர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.
Also Read
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!
-
பீரோவைத் திறந்தபோது... துணிகளுக்கு இடையே 3 அடி நாகப்பாம்பு!
-
நாட்டிற்கு இருக்கும் ஒரே நெருக்கடி பா.ஜ.க தான் : மோடியின் பேச்சுக்கு அகிலேஷ் விமர்சனம்!