Sports
"கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே தோனியின் ரசிகராக இருந்துள்ளேன்" - டேல் ஸ்டெய்ன் நெகிழ்ச்சி !
இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணிக்காக ஆடி வருகிறார். இந்த நிலையில், எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே தோனியின் ரசிகராக இருந்து வந்துள்ளேன் என முன்னாள் தென்னாபிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், "கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே தோனியின் ரசிகராக இருந்துள்ளேன். அதன் காரணமாக சிஎஸ்கே அணியின் சூழலில் இருந்து தோனியை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளேன். ஏனென்றால் தோனி ஒரு கேப்டன்
போதும் விக்கெட் கீப்பர் மற்றும் பவுலர்களுக்கு இடையில் ஒரு மிகச்சிறந்த உறவு இருக்கும்.அதனால் சென்னை அணியில் அந்த உறவை அனுபவிக்க விரும்பினேன். இதற்காக சென்னை அணி அணியின் பெஞ்சில் அமர கூட தயாராக இருந்துள்ளேன். என்னை மீண்டும் கிரிக்கெட் விளையாட அழைத்தால் கூட, தோனி போன்ற ஒருவரின் தலைமையின் கீழ் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல், ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம்!” : முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
“இந்தியாவில் 3 முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-க்கு நூற்றாண்டு நாணயமா?” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்கும் அரசு : பல்லுயிர் பாதுகாப்பில் சிறந்து விளக்கும் திராவிட மாடல் !
-
“தேசிய கைத்தறி கண்காட்சி 2025!” - 30% முதல் 50% வரை சிறப்புக் கழிவு! : எங்கு? எப்போது?
-
ஆதவ் அர்ஜூனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!