Sports
நாடு திரும்ப முடியாத சிக்கலில் ஷாகிப் அல் ஹசன் : முடிவுக்கு வருகிறதா கிரிக்கெட் வாழ்க்கை !
வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை கண்டித்து வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த போராட்டம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக சற்று தணிந்த நிலையில், மீண்டும் போராட்டம் வெடித்தது.
இந்த போராட்டத்தில் தீவிரமடைந்ததை உணர்ந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச்சென்றார். அதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு தற்போது பொறுப்பேற்றுள்ள நிலையில், ஷேக் ஹசீனா மீது வங்கதேசத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுட்டள்ளது. அந்த வகையில் வங்கதேசத்தில் உள்ள டாக்காவின் அடபோர் காவல் நிலையத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் கடந்த தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி சார்பில் தேர்தலில் நின்று எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் கொலை வழக்கில் அவரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் 28-வது குற்றவாளியாக ஷாகிப்பின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் நாடு திரும்ப முடியாமல் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது. வங்கதேச அணி இந்தியாவுக்கு எதிராக ஆடியபோது அந்த அணியில் ஷாகிப் இடம்பிடித்திருந்தார். ஆனால் அடுத்ததாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஷாகிப் விலகியுள்ளார். இதற்கு அவர் நாடு திரும்ப முடியாத சிக்கலில் இருப்பதே காரணமாக கூறப்பட்டது.
இதனால் ஷாகிப் அல் ஹசனின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இனி அவரால் வெளிநாட்டில் நடக்கும் லீக் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கமுடியும் என்பதால் அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!