Sports
2026 காமன்வெல்த் போட்டிகள் : இந்தியா பதக்கம் வெல்லும் முக்கிய போட்டிகள் நீக்கம்... முழு விவரம் உள்ளே!
பிரிட்டனின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த நாடுகள் தங்களுக்குள் தொடர்ந்து இணக்கமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நாடுகளை ஒருங்கிணைத்து காமன்வெல்த் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த கூட்டமைப்பில் இருந்த நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
1930-ம் ஆண்டு தொடங்கிய இந்த காமன்வெல்த் போட்டிகள் அதன்பின்னர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 2026ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், 2026 காமன்வெல்த் போட்டிகளில் ஹாக்கி, கிரிக்கெட், மல்யுத்தம் போன்ற முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல், டெபிள் டேன்னிஸ், ஸ்குவாஷ், பாட்மின்டன் உள்ளிட்ட 10 விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக காமன்வெல்த் கமிட்டி அறிவித்துள்ளது.
நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இது குறித்து வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்டுள்ள இந்த போட்டிகளில் மட்டும் இந்தியாவுக்கு குறைந்தது 10 பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு இருப்பதால் இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
மற்றொரு நிர்பயா : பா.ஜ.க ஆளும் அரியானாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - உடலில் 12 தையல்!
-
“விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம் - கிடப்பில் போடப்பட்ட கீழடி அறிக்கை : முரசொலி!