Sports
INDvsBAN டெஸ்ட் போட்டியை காண திரண்ட சென்னை ரசிகர்கள் : வலுவான நிலையில் இந்திய அணி !
இந்தியா- பங்களாதேஷ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இந்திய வீரர்கள் தற்போது களம் இறங்கி உள்ளதால் ரசிகர்கள் போட்டியை காண்பதற்கு அலைய அலையாய் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 91.2 ஓவர்களில் 376 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் குவித்தனர். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஹசன் மக்மூத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் ஆரம்பம் முதலே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் வெறும் 149 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 32 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களுடன் ஆடிக்கொண்டு வருகிறது. இந்தியா இதுவரை 432 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியில் ரிஷப் பண்ட் 82 ரன்களும், கில் 86 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். விடுமுறை நாளான இன்று இந்தியா - வங்கதேச முதல் டெஸ்ட் போட்டிக்கு சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் அதிகளவில் ஆட்டத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக வருகை தந்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
Also Read
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!