Sports
நிறைவடைந்தது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் : முதலிடம் பிடித்து இந்தியா அசத்தல்!
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கடந்த 11-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டிகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தியா உட்பட 7 நாடுகள் பங்கேற்கும் இந்தத் 210 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்ற இந்த தொடர் இன்று நிறைவடைந்தது. இந்த தொடரில் 21தங்கம், 22வெள்ளி, 5வெண்கலம் என 48பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்தது.
9 தங்கம் உள்ளிட்ட 35 பதக்கங்களுடன் இலங்கை அணி இரண்டாவது இடம் பிடித்தது. வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகள் அடுத்த அடுத்த இடத்தைப் பிடித்தது. இந்த தொடர் நிறைவடைந்த நிலையில் முதலிடம் பிடித்த இந்திய அணிக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.
இந்த தொடரிில் மொத்தமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் அவர்களில் 7 பேர் பதக்கம் வென்றனர். அதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயா 2 தங்க பதக்கங்களை வென்று அசத்தினார்.
பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்கள் விபரம்;
அபிநயா - 2 தங்கம் (100மீ, 100மீ தொடர் ஓட்டம்)
கனிக்ஷா டீனா - 1 தங்கம் (400மீ)
பிரதிக்ஷா யமுனா - 1 தங்கம் (நீளம் தாண்டுதல்)
ஜிதின் - 1 தங்கம் (நீளம் தாண்டுதல்)
லக்ஷன்யா - 1 வெள்ளி (நீளம் தாண்டுதல்)
கார்த்திகேயன் - 1 வெள்ளி (100மீ தொடர் ஓட்டம்)
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!