Sports
"இதை செய்தால் மட்டுமே நமது அணி பாகிஸ்தான் செல்லவேண்டும்" - ஹர்பஜன் சிங் கருத்து !
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ள நிலையில், அது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. இதனால் அடுத்து பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி தற்போது பரபரப்பாக எழுந்த நிலையில், அந்த தொடருக்கான ஏற்பாடுகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த முறையும் பாகிஸ்தான் செல்ல இந்திய அணிக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "பாகிஸ்தானை சேர்ந்தவக்ரால் அவர்கள் பார்வையில் சொல்வார்கள். நாம் நமது பார்வையில் கருத்து சொல்கிறோம். என்னை பொறுத்தவரை பாகிஸ்தானில் எப்போதும் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கும். ஒருவேளை வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றால் நாம் அங்கு செல்ல வேண்டாம்.
அதே நேரம் அணி வீரர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் உத்தரவாதம் கொடுத்தால் பின்னர் அங்கு விளையாடுவதில் எந்த தயக்கமும் இல்லை. அதே நேரம் இது குறித்து அரசாங்கம்தான் ஒரு முடிவை எடுக்கவேண்டும். ஒரு கிரிக்கெட்டராக நான் நீங்கள் கிரிக்கெட்டில் விளையாட விரும்பினால் எங்கு வேண்டுமானாலும் விளையாடுங்கள் என்றே சொல்வேன்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!