Sports
“இந்தியா பாகிஸ்தானுக்கு வராததற்கு பாதுகாப்பை ஒரு சாக்கு போக்காக சொல்கிறது” - அப்ரிடி விமர்சனம் !
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ள நிலையில், அது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. இதனால் அடுத்து பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி தற்போது பரபரப்பாக எழுந்த நிலையில், அந்த தொடருக்கான ஏற்பாடுகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் இந்த தொடரில் இந்தியா பங்கேற்காது என்றும், இந்திய அரசு அதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கையில் நடத்த பிசிசிஐ சார்பில் ஐசிசி யிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாடாமல் இருப்பதற்காக பாதுகாப்பை ஒரு சாக்கு போக்காக கூறி வருகிறது என பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " எங்களுக்கு இந்தியாவில் அச்சுறுத்தல்கள் இருந்தது. அப்போதுகூட நாங்கள் அங்கு சென்று கிரிக்கெட் ஆடினோம். பல கடினமான காலகட்டங்களில் இந்தியாவிற்கு சென்று விளையாடி வந்திருக்கிறோம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து இந்தியாவை ஆதரித்து வந்தது. எங்கள் கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் அரசாங்கமும் கூட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கண்டுகொள்ளாமல் எங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாடாமல் இருப்பதற்காக பாதுகாப்பை ஒரு சாக்கு போக்காக கூறி வருகிறது. இதனை ஏற்க முடியாது” என்று கூறியுள்ளார்.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!