Sports
"CSK அணிக்காக விளையாடியது கடவுள் அளித்த பரிசு" - இலங்கை நட்சத்திர வீரர் நெகிழ்ச்சி !
இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணிக்காக ஆடி வருகிறார். அவரால் அறிமுகம் செய்யப்பட்ட ஏராளமான வீரர்கள் தற்போது உலகளவில் மிகப்பெரும் வீரர்களாக திகழ்ந்து வருகிறார்.
அப்படி தோனியால் அறிமுகம் செய்யப்பட்டு உலகின் மிகச்சிறந்த டி20 பந்துவீச்சாளராக திகழ்ந்து வருபவர் இலங்கை அணி வீரர் பதிரனா. ஐபிஎல் தொடரில் பும்ராவுக்கு நிகராக சிறப்பாக பந்துவீசிவரும் பதிரனா எதிர்வரும் காலத்தில் இப்போதை விட சிறப்பாக ஆடுவார் என பலரும் கூறி வருகினறனர்.
இந்த நிலையில், ஓய்வறையில் தோனியிடம் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று என்று பதிரனா கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "என் 19 வயது வரையிலும் எந்த இலங்கை கிரிக்கெட் அணியிலும் நான் இடம்பெறவில்லை. என் பெயர் கூட யாருக்கும் தெரியாது.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வானதைத் தொடர்ந்து, இலங்கையின் பிரதான அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமானால் சென்னை அணிக்காக நான் விளையாடியது கடவுள் எனக்கு அளித்த பரிசு ஏப்ரல் சொல்ல வேண்டும். அதன் பின்னரே என் வாழ்க்கை மாறியது. அதிலும் .ஓய்வறையில் தோனியிடம் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று"என்று கூறியுள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!