Sports
கோபா அமெரிக்கா : 9 முறை சாம்பியனான பிரேசிலை வெளியேற்றிய உருகுவே ! அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல் !
ஃபிபா உலகக்கோப்பை, யூரோ கோப்பை தொடருக்கு பின்னர் அதிகம் பேரால் பார்க்கப்படும் கால்பந்து தொடராக கோபா அமெரிக்கா தொடர் திகழ்ந்து வருகிறது. பொதுவாக தென்னமெரிக்க நாடுகளுக்கான தொடராக இருந்தாலும் இதில் வேறு கண்டத்தை சேர்ந்த நாடுகளும் அழைப்பு ரீதியாக பங்கேற்று வருகின்றது.
இந்த முறை இந்த கால்பந்து தொடரை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் வட அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கோபா அமெரிக்கா தொடர் நடைபெற்று வருகிறது. இந்த முறை இந்த தொடரில் வட அமெரிக்காவை சேர்ந்த அணிகளும் பங்கேற்கவுள்ளது.
அந்த வகையில் தென்னமெரிக்காவை சேர்ந்த 10 நாடுகளும் வட அமெரிக்காவை சேர்ந்த 6 அணிகளும் பங்கேற்கிறது. உலககோப்பைகளை அதிகம் முறை வென்ற அணிகளான பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே உள்ளிட்ட அணிகள் இந்த தொடரில் பங்கேற்பதால் இந்த தொடர் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முக்கியமான காலிறுதி ஆட்டத்தில் பலம்வாய்ந்த பிரேசில் மற்றும் உருகுவே ஆகிய அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தாலும் ஆட்ட நேர முடிவு வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் 90 நிமிடங்கள் முடிந்த பின்னர் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்க்கு சென்றது. இதில் பிரேசில் வீரர்கள் டக்ளஸ் லூயிஸ் மற்றும் மிலிட்டோ ஆகியோர் தங்கள் வாய்ப்பை கோலாடிக்காமல் வீணடித்தனர். அதே நேரம் உருகுவே தரப்பில் ஜிமெனஸ் தவிர அனைவரும் கோல் அடித்தனர். இதனால் உருகுவே அணி 9 முறை கோபா அமெரிக்கா சாம்பியனான பிரேசில் அணியை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
Also Read
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!