Sports
"விராட் கோலி, ரோஹித் சர்மாக்கான மாற்றை இந்தியா விரைவில் கண்டறியும்" - இங். முன்னாள் வீரர் கணிப்பு !
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து டி20 உலகக்கோப்பைக்கு சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், அவர்களின் டி20 பயணம் குறித்து அவர்களே முடிவே செய்துகொள்ளலாம் என பிசிசிஐ சார்பில் கூறப்பட்டதைத் தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்த உலகக்கோப்பை டி20 தொடர் வரை விளையாட முடிவு செய்ததாக கூறப்பட்டது.
அதன்படி மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பிடித்தார். அந்த தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. அதனைத் தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அறிவித்தனர்.
இந்த நிலையில், ஓய்வு பெற்ற விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கான மாற்றை இந்திய அணி விரைவில் கண்டுபிடித்துவிடும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக் வாகன் கூறியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், "விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இன்னும் நிறைய ஐசிசி கோப்பையை வென்றிருக்க வேண்டும். ரோகித் சர்மா 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையையை வென்றார்.
அதன்பின்னர் மீண்டும் அவர் அதனை வெல்ல, 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நிச்சயமாக இவர்களை மிஸ் செய்வார்கள். ஆனால் இவர்களுக்கு மாற்று வீரர்கள் உடனடியாகவே கிடைத்து விடுவார்கள். ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் பலர் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!