Sports
இது மைதானமா ? பூங்காவா ? - உலகக்கோப்பைக்கான நியூயார்க் மைதானம் குறித்து டிராவிட் கருத்து !
20 அணிகள் கலந்துகொள்ளும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மொத்தமாக 29 நாட்கள் நடைபெறும் நிலையில், லீக் போட்டியில் இந்தியா ஆடும் ஆட்டங்கள் அனைத்தும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
இந்தியா நியூயார்க் மைதானத்தில் தனது முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டி நடைபெறும் நியூயார்க் மைதானம் 34 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இரண்டே மாதங்களில் உருவாக்கப்பட்டது.
மேலும் இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்படும் பிட்ச் ஆடுகளத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஒரு பூங்காவில் இருப்பதுபோல இருக்கிறது என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நியூயார்க் மைதானம் குறித்து கூறியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், "உலகக் கோப்பை தொடர் என்றாலே ஒரு பெரிய அல்லது பாரம்பரியமான மைதானத்தில்தான் போட்டிகள் நடைபெறும். ஆனால் இங்கு ஒரு பூங்காவில் இருப்பதை போல இருக்கிறது. இந்த மைதானமே வித்தியாசமாக இருக்கிறது.
அமெரிக்கா போன்ற ஒரு புதிய நாட்டிற்கு வருவது உற்சாகமாகத்தான் இருக்கிறது என்றாலும் இங்குள்ள சூழல் வித்தியாசமாக இருக்கிறது. இந்த நாட்டில் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் இல்லை என்பது தெரிகிறது. எனினும் போட்டிக்குத் தயாராவது, பயிற்சி செய்வது போன்ற எங்களின் திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“பா.ஜ.க-வின் ஊதுகுழல் அன்புமணி” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்!
-
“சனாதனத்தின் வேர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுத்தெறிவார்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!