Sports
"அவ்வளவுதான், மும்பை இந்தியன்ஸ் அணியின் கதை முடிந்து விட்டது" - இர்பான் பதான் கருத்து !
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளம்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் சொந்த அணியின் ரசிகர்களாலேயே ஹர்திக் பாண்டியா கிண்டலுக்கு உள்ளாகினார்.
அதோடு ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்படாத மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே வென்று தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கதை முடிந்து விட்டது என முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "மும்பை அணி பேப்பரில் சிறந்த அணியாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் களத்தில் சரியாக கேப்டனால் நிர்வகிக்கப்படவில்லை. கிரிக்கெட் என்பது கேப்டனும் நிர்வாகமும் சேர்ந்த ஒரு விளையாட்டு ஆகும். தற்பொழுது இந்த அணி ஒன்றாக சேர்ந்து ஒரே அணியாக விளையாடவில்லை.
இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கதை முடிந்து விட்டது என்றே சொல்லலாம். வீரர்கள் கேப்டனை ஏற்றுக் கொள்வது மிகவும் முக்கியம். ஆனால் அப்படி ஏற்றுக் கொள்ளவில்லை என நான் நினைக்கிறேன்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!
-
திமுக தலைவர் வெளியிட்ட வீடியோ.. தாராபுரம் தொகுதி வாக்காளர்களே.. உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!
-
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்னும் Dance Fightதான் போடல” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
-
“தோல்விப் பயத்தால் ரூ.10,000 கொடுக்கம் த.வெ.க” : தேர்தல் ஆணையத்தில் என்.ஆர்.இளங்கோ புகார் மனு!