Sports
"T20 உலகக்கோப்பையில் விராட் கோலி வேண்டாம் என ஜெய் ஷா முடிவெடுத்துள்ளார்" -முன்னாள் வீரர் குற்றச்சாட்டு !
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து டி20 அணியில் இதனால் இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் டி20 பயணம் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
ஆனால், அவர்களின் டி20 பயணம் குறித்து அவர்களே முடிவே செய்துகொள்ளலாம் என பிசிசிஐ சார்பில் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இந்த இருவரும் அணியில் இடம்பிடித்தனர். இதனால் அடுத்த உலகக்கோப்பை தொடரிலும் அவர்கள் இடம்பெறுவர் என்பது ஏறக்குறைய உறுதியானதாக கூறப்பட்டது.
ஆனால், 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியை நீக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது.
இங்குள்ள மைதானத்தில் பந்துகள் மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வரும். மேலும், சுழற்பந்துக்கும் இங்குள்ள மைதானங்கள் அதிகமாக ஒத்துழைக்கும். இது போன்ற மைதானங்களில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக உள்ளதால், இந்த தொடருக்கு விராட் கோலியை நீக்க அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி வேண்டாம் என ஜெய் ஷா முடிவெடுத்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கீர்தி ஆசாத் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " விராட் கோலிக்கு டி20 உலகக்கோப்பை இந்திய அணியின் இடம் கொடுக்கக்கூடாது என்று ஜெய்ஷா முடிவெடுத்துள்ளார். வித்தகராக இந்திய தேர்வாளர்களிடம் பேசி விராட் கோலிக்கு டி20 உலகக்கோப்பை இந்திய அணியின் இடமில்லை என்று எல்லோரையும் நம்ப வைக்கும் பொறுப்பு அஜித் அகர்கருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜெய் ஷா ரோஹித் சர்மாவையும் அணுகி இருக்கிறார். ஆனால் ரோஹித் சர்மா கண்டிப்பாக தங்கள் அணிக்கு விராட் கோலி வேண்டும் என்று கூறியிருக்கிறார். விராட் கோலி நிச்சயம் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவார். இது குறித்த அறிவிப்பு அணித்தேர்வுக்கு முன்பாக வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!