Sports
64 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி : 9 விக்கெட்டுகளை எடுத்து அஸ்வின் அசத்தல்!
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், அடுத்த போட்டியில் இந்தியா வென்று தொடரை 1-1 என சமன் செய்தது.
தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதைத் தொடர்ந்து 5வது டெஸ்ட் போட்டி மாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்களக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 477 ரன்களை எடுத்தது. ரோகித், சுப்மன் கில் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். பிறகு இரண்டாவது இன்னிங்கிஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். மேலும் தனது 100வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
மேலும் டெஸ்ட்போட்டியில் 5 விக்கெட்டுகளை அதிகம் கைப்பற்றிய கும்ப்லேவின் சாதனையை அஷ்வின் முறியடித்துள்ளார். 132 போட்டிகளில் கும்ப்லே 35 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் அஸ்வின் 100 போட்டிகளில் 36 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !