Sports
"BCCI எடுத்துள்ள இந்த முடிவு மிகச் சரியானது" - நட்சத்திர வீரர்கள் நீக்கம் குறித்து கபில்தேவ் கருத்து !
டெஸ்ட் போட்டிதான் சிறந்த வீரர்களை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு உதாரணமாக தொடர்ந்து 4 நாள் ஆடப்படும் ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் இந்திய அணியில் தூண்களாக பல ஆடுகள் நீடிக்கிறார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள்தான்.
ஆனால், இந்த காலத்தில் ஐபிஎல் வந்ததால் ரஞ்சி கோப்பை தொடர் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், இந்திய அணியில் ஆடும் நட்சத்திர வீரர்களும் ரஞ்சி கோப்பையில் ஆடாமல் புறக்கணித்தனர். சமீப காலத்தில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது .
அதனைத் தொடர்ந்து காயம் அடைந்த வீரர்களை தவிர அனைவரும் ரஞ்சி அணியில் ஆடவேண்டும் என்று பிசிசிஐ அதிரடி உத்தரவிட்டது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு காரணமாக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாமல் விலகினார்.
அதே போல தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த இளம் வீரர் இஷான் கிஷனும் ரஞ்சி தொடரில் ஆடாமல் ஐபிஎல் தொடருக்காக ஹர்திக் பாண்டியவுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். இவர்கள் இருவரையும் ரஞ்சி தொடரில் ஆடுமாறு பிசிசிஐ கூறியும் இவர்கள் ரஞ்சி அணியில் இணையவில்லை.
இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகிய இருவரையும் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இருந்து பிசிசிஐ நீக்கியது. அதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர்ரஞ்சி கோப்பையில் விளையாடவுள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில், பிசிசிஐ எடுத்துள்ள இந்தமுடிவு மிகச் சரியானது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "நாட்டை விட தனிப்பட்ட வீரர்கள் யாரும் பெரியவர்கள் இல்லை. பிசிசிஐயின் முடிவும் இதைத்தான் காட்டுகிறது. தேசிய அணிக்காக விளையாடுபவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாட முன்வரவேண்டும். பிசிசிஐயின் இந்த முடிவு உள்ளூர் கிரிக்கெட்டைக் காக்கும். மேலும் இளம்வீரர்களையும் ஊக்குவிக்கும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!