Sports
மகளிர் ஐபிஎல் தொடரை விட மோசமான நிலைக்கு சென்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் : ரசிகர்கள் கிண்டல் !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் ஐபிஎல் ரீதியிலான லீக் தொடர்கள் தொடங்கப்பட்டது. அந்த வகையில் பாகிஸ்தான் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) என்ற பெயரில் லீக் தொடரை ஒன்றை தொடங்கியது. ஆனால், அது ஐபிஎல் போல மிகப்பெரிய வெற்றியை பெறாமல் சோபித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர் மகளிர் ஐபிஎல் தொடரை விட மோசமான நிலைக்கு சென்றதாக இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மகளிருக்கான ஐபிஎல் தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என 5 அணிகள் இந்த தொடரில் களமிறங்கின.
இந்த தொடர் தற்போது பெங்களுருவில் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியை காண அதிகளவில் ரசிகர்கள் மைதானத்துக்கு வருகை தருகின்றனர். இதனால் பெரும்பாலான அரங்கங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் விரைவில் ஐபிஎல் தரத்துக்கு இதனை உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
ஆனால், பாகிஸ்தான் தேசிய அணி வீரர்கள் மற்றும் சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் போட்டிகளை காண குறைவான அளவு ரசிகர்களே மைதானத்துக்கு வருகை தருவதாக அங்கிருந்து வெளியாகும் புகைப்படங்களில் காணமுடிகிறது. இதனை குறிப்பிட்டே மகளிர் ஐபிஎல் தொடரை விட பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர் மோசமான நிலையில் உள்ளது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?