Sports

சென்னை To ராஜ்கோட் : மீண்டும் அணியில் இணையும் அஸ்வின் : உறுதிசெய்த BCCI... முழு விவரம் என்ன ?

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளரான திகழ்ந்து வருகிறார்.இவர் தற்போது நடைபெற்று வரும், இங்கிலாந்து அணிக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் க்ராலியின் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன்மூலம் கும்ப்ளேவுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். ஆனால், அந்த சாதனையைப் படைந்த சிறிது நேரத்தில் அஸ்வின் களத்தில் இருந்து வெளியேறினார்.அவர் எதனால் வெளியேறினால் என்ற காரணம் புரியாமல் இருந்த நிலையில், அவரின் தாயாய் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாகவே அவர் போட்டியில் இருந்து வெளியேறினார் என பி.சி.சி.ஐ சார்பில் கூறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு பதில் வீரராக யாரையும் இந்திய அணி களமிறக்கவில்லை. இதனால் அஸ்வின் மீண்டும் அணியில் இணைவாரா? இல்லையா ? என்பது குறித்த கேள்வி எழுந்தது. ஆனால், தற்போது அஸ்வின் மீண்டும் இந்திய அணியில் இணைவார் என்பது உறுதியாகியுள்ளது.

இது குறித்து பிசிசிஐ சார்பில் வெளியான அறிக்கையில், "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் குடும்ப அவசரநிலை காரணமாக அணியில் இருந்து வெளியேறிய ஆர் அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்புவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்டின் 2வது நாளுக்குப் பிறகு, ரவிச்சந்திர அஸ்வின் அணியில் இருந்து தற்காலிகமாக விலகினார். தொடர்ந்து அவர், 4வது நாளில் மீண்டும் களமிறங்கி, நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் அணியின் தொடர்ந்து பங்களிப்பார்.

இந்த சவாலான காலகட்டத்தில் அணியும் அதன் ஆதரவாளர்களும் அஷ்வினுக்கு ஆதரவாக ஒன்றுபட்டுள்ளனர். மேலும் அவரை மீண்டும் களத்திற்கு வரவேற்பதில் பிசிசிஐ நிர்வாகம் மகிழ்ச்சியடைகிறது" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து தனது கடைசி இன்னிங்க்ஸை ஆடும்போது அதில் அஸ்வின் பந்துவீசுவார் என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

Also Read: அக்பர்,சீதா சிங்கங்கள் ஒரே இடத்தில் இருக்க இந்துத்துவ அமைப்பு எதிர்ப்பு: நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு