Sports
"பேட்ஸ்மேனாக அஸ்வின் அணிக்கு என்ன செய்வார்"- தன்னை விட அதிக டெஸ்ட் சதங்கள் விளாசியவரை விமர்சித்த யுவராஜ்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளரான திகழ்ந்து வருகிறார்.
இந்திய அணியில் மணிக்கட்டு பந்துவீச்சாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஆப்-ஸ்பின் பந்துவீச்சாளரான இவர் தற்போது வரை இந்திய அணியில் நீடித்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர் என சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒதுக்கப்பட்டார் அஸ்வின்.
எனினும் கிடைத்த வாய்ப்புகளில் தனது திறனை வெளிப்படுத்தி கடந்த உலகக்கோப்பை டி20 தொடர், மற்றும் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் என இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தினார். அதிலும் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாகவே செயல்பட்டார்.
இந்த நிலையில், அஸ்வின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட தகுதியானவர் இல்லை என முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவராஜ் சிங், "அஸ்வின் ஒரு மிகச்சிறந்த பவுலர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அவரை டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தகுதியான வீரராக நான் நினைக்கவில்லை.
பந்துவீச்சில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். அதேசமயம் பேட்ஸ்மேனாகவும், ஃபீல்டராகவும் அவரால் அணிக்கு என்ன பங்களிப்பை செய்துவிட முடியும்? டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயமாக அவர் இந்திய அணியில் இடம்பெற வேண்டும். ஆனால், வெள்ளை பந்து கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணியில் இடம்பெறுவதற்கு அவர் தகுதியானவர் என நான் நினைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
முழு நேர பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் டெஸ்ட் 33.9 என்ற சராசரியுடனும், டி20-யில் 28 சராசரியுடனும் இருக்கும் நிலையில், பந்துவீச்சாளரான அஸ்வினின் டெஸ்ட் சராசரி 26.8 என்பதும், டி20 சராசரி 26.3 என்ற அளவிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல யுவராஜ் சிங் டெஸ்டில் 3 சதங்கள் அடித்துள்ள நிலையில், அஸ்வின் 5 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!