Sports
டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் முயற்சி- தென்னாப்பிரிக்க வாரியத்தின் அறிவிப்பால் சர்ச்சை- முழு விவரம் என்ன?
டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே.
அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' கோப்பை உருவாக்கப்பட்டது. இந்த கோப்பையை முதலாவது ஆண்டு நியூஸிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், இந்த ஆண்டு இந்த கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களின் ஆதரவு குறைந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' தொடர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அதிகரித்ததாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர். மேலும், ஐசிசி-யும் தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அதே நேரம் சில வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு டி20 லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் தென்னாபிரிக்கா வாரியம் அந்த நாட்டில் நடக்கும் லீக் போட்டிகளில் முக்கிய வீரர்கள் பங்கேற்க வேண்டும் என நியூஸிலாந்து சுற்றுப்பயணத்துக்கு செல்லும் டெஸ்ட் அணிக்கு இரண்டாம் நிலை வீரர்களை அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்கா வாரியம் நடத்தும் டி20 லீக் போட்டிகளில் ஆடும் வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்ற விதியையும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்துள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் முயற்சி என பல்வேறு தரப்பினரும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!