Sports
"IPL அணிகளில் உள்ள வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்" - அஸ்வின் கோரிக்கை !
கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான மினி ஏலம் நேற்று நடைபெற்றது.
இந்த ஏலத்தில் 10 அணிகளை சேர்ந்த உரிமையாளர்கள், மேலாளர்கள், பயிற்சியாளரால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் இந்திய வீரர்களை விட அதிக தொகைக்கு ஆணிகளால் ஏலம் எடுக்கப்பட்டனர்.
இது தவிர ஏற்கனவே ஏராளமான வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஐபிஎல் அணிகளில் இருக்கும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் அவர்கள் நாட்டை சேர்த்த வீரர்களையே ஐபிஎல் அணிகளில் எடுப்பதாக இந்திய வீரர் அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்துப் பேசியுள்ள அஸ்வின், " ஐபிஎல் அணிகளில் இருக்கும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தங்களுடைய நாட்டை சேர்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க சொல்லி தங்களது அணிக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். நான் இதை யார் செய்கிறார் என்று வெளிப்படையாக சொல்ல முடியாது. அப்படி சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை.
அதே நேரம்இது மிகவும் தவறான ஒரு முன்னுதாரணம். இது இந்தியன் பிரீமியர் லீக். ஆனால் 8 வெளிநாட்டு வீரர்களை ஒவ்வொரு அணியும் தேர்வு செய்கிறார்கள். அதில் ஒரே நாட்டை சேர்ந்த பலர் இடம்பெறுகிறார்கள். இதனால் இந்திய ஆடுகளங்கள் குறித்து அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். இந்திய வீரர்களின் குறை, நிறை என்ன என்பது குறித்து எல்லாம் அவர்கள் நன்றாக கற்றுக் கொண்டு இந்திய அணிக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். எனவே வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 8-லிருந்து நான்காக குறைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!