Sports
நாளை டி20 போட்டி : அணியில் இணையாமல் சுற்றுலா சென்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள்.. முழு விவரம் என்ன ?
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை இளம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் உள்ளிட்ட ஏராளமான இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க தொடரில் இந்திய அணிக்கு டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் , ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல் ராகுல் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா என 3 விதமான இந்திய கேப்டன்கள் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
இதில் டி20 தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த 3 வீரர்கள் இதுவரை இந்திய அணியில் இணையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தீபக் சஹர், டி20 அணியின் துணை கேப்டனான ரவீந்திர ஜடேஜா மற்றும் இளம் வீரர் சுப்மன் கில் ஆகியோர் இன்னும் இணையவில்லை என்றும், அல்லது மிகவும் தாமதமான இணைந்தனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதில், தீபக் சஹர் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக அணியில் இணையாத நிலையில், ஜடேஜா குடும்பத்தினருடன் பாரிஸ் சுற்றுலா சென்றுள்ளார் என்றும், சுப்மன் கில் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார் என்றும், இதன் காரணமாக இருவரும் அணியில் இணையவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!