Sports
"தென்னாப்பிரிக்காவில் வைத்து எங்கள் அணியை இந்தியா வீழ்த்துவது கடினம்" - ஜாக் காலிஸ் கருத்து !
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை இளம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் உள்ளிட்ட ஏராளமான இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க தொடரில் இந்திய அணிக்கு டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் , ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல் ராகுல் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா என 3 விதமான இந்திய கேப்டன்கள் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
இதுவரை தென்னாபிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லாத நிலையில், இந்த முறை இந்திய அணி வெற்றிபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், டெஸ்ட் தொடரில் இந்திய அணியால் தென்னாப்பிரிக்காவை தென்னாப்பிரிக்காவில் வைத்து தோற்கடிப்பது கடினம் என தென்னாப்பிரிக்க அணி முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், " உண்மையில் இது ஒரு நல்ல டெஸ்ட் தொடராக இருக்கப்போகிறது. இந்திய அணி வலுவாக இருக்கிறது. ஆனால், இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்காவை தென்னாப்பிரிக்காவில் வைத்து தோற்கடிப்பது கடினம். கேப் டவுன் இந்தியாவிற்கும் பொருத்தமான ஆடுகளங்களாக இருக்கும். மற்ற இரண்டு போட்டிகளும் நெருக்கமான போட்டிகளாக இருக்கும் என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!