Sports
38 வயதில் இளம்வீரர்களுடன் போட்டிபோடும் தினேஷ் கார்த்திக் : விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து அசத்தல் !
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
அதில் சிறப்பாக செயல்பட்ட அவர் அணியில் தனது இடத்தை உறுதி படுத்திக்கொண்டதோடு டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார். ஆனால், அதன்பின்னர் அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டதால் தற்போது வர்ணனையாளராக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே ட்ராபி ஒருநாள் தொடருக்காக தமிழ்நாடு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் தற்போது தமிழ்நாடு 4 ஆட்டங்கள் ஆடியுள்ள நிலையில், அதில் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜொலித்து வருகிறார்.
கோவாவிற்கு எதிரான போட்டியில் 31 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 47 ரன்கள் குவித்தார்.தொடர்ந்து பரோடா அணிக்கு எதிரான போட்டியில் 51 பந்துகளில் 68 ரன்கள் அடித்தார். தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தனி ஒருவனாக போராடி 93 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இளம் வீரர்களுக்கு இணையாக தன்னாலும் செயல்பட முடியும் என்பதை வெளிக்காட்டியுள்ளார். அவரை ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!
-
“மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்கள்...” : பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் !
-
சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்- திறந்து வைத்த CM MK Stalin
-
ரூ.150 கோடி முதலீடு - எல்காட் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!