Sports
இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு தற்காலிக தடை : அரசின் தலையீடு காரணமாக ICC வெளியிட்ட அதிரடி அறிவிப்பு !
கடந்த 2-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. இதில்முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் 55 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி 303 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதோடு இந்த தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மோசமானதாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கூட இலங்கை அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இது போன்ற காரணங்களால் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
இதனை எதிர்த்து இலங்கை நீதிமன்றத்தில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில், இலங்கை அரசின் நடவடிக்கைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்காலிகமான தடை செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் இலங்கை அரசின் தலையீடு என்பது ஐசிசி-யின் விதிகளை மீறியது. இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது என ஐசிசி சார்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
MLA தொடங்கி அரசு ஆலோசகர் வரை.. ஜோதிடத்துக்கு முக்கியத்துவம்.. மூட நம்பிக்கைக்கு செவிசாய்க்கும் விஜய்!
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!