Sports
"அரையிறுதியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை சந்திக்க வேண்டும்" - இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி விருப்பம் !
2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த தோல்வியோடு பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பின்னர் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராகவும் தோல்வியைத் தழுவியது. ஆனால், அதன் பின்னர் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது.
தொடர்ந்து முக்கியமான நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், டக்வொர்த் லூயிஸ் முறைபடி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் தங்கள் அரையிறுதி வாய்ப்பை இன்னும் அந்த அணி தக்கவைத்துள்ளது. இந்த நிலையில், அரையிறுதி போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற வேண்டும் என விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், " இந்த உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று இந்தியாவுடன் விளையாட வேண்டும். அப்படி விளையாடும் பட்சத்தில் அந்தப்போட்டி சிறந்த அரையிறுதி போட்டியாக பதிவாகும்" என்று கூறியுள்ளார்.
தற்போது முதல் மூன்று இடங்களை இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பிடித்துள்ள நிலையில், நான்காம் இடத்துக்காக போட்டியில் நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!