Sports
"மைதானத்துக்கு சென்று வீரர்களை திட்டலாம் என்று நினைத்தேன்"- வங்கதேச பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் காட்டம் !
டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி டாஸ் வென்ற நிலையில், பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது.
இதில் நான்காவது விக்கெட்டாக இலங்கை வீரர் சமரவிக்ரமா ஆட்டமிழந்த நிலையில், அடுத்த வீரராக ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். ஆனால், அவரின் ஹெல்மெட்டில் ஸ்டிராப்ஸ் சரியில்லாத காரணத்தால் மைதானத்துக்கு வந்து வேறு ஹெல்மெட்டை கேட்டுள்ளார். அதன்படி இலங்கை வீரர் ஒருவர் ஹெல்மெட்டை கொடுத்துள்ளார்.
இதனால் அவர் தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததால் இது குறித்து வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நடுவரிடம் புகாரளிக்க விதிப்படி ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் என்ற வகையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்த முறையில் ஆட்டமிழந்த முதல் வீரராக மேத்யூஸ் மாறியுள்ளார்.
வங்கதேச அணியின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வங்கதேச அணியின் பயிற்சியாளரே அந்த அணியை விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய வங்கதேசத்தின் பவுலிங் பயிற்சியாளர் ஆலன் டொனால்ட், அந்த நேரத்தில் பரவாயில்லை சீக்கிரமாக ஹெல்மெட்டை சரி செய்து கொண்டு விளையாடுங்கள் என்று வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் சொல்லியிருக்க வேண்டும்.
அந்த நேரத்தில் மைதானத்துக்குள் சென்று போதும் நீங்கள் செய்தது எல்லாம். இந்த செயலை நிறுத்துங்கள் என்று அணி வீரர்களை திட்டலாம் என்று நினைத்தேன். போட்டி முடிந்தபின்னர், இலங்கை அணியினர் எங்களுக்கு கை கொடுக்காமல் சென்றபோது, நான் முதல் ஆளாக சென்று அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!
-
‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ அனைத்தும் சமம் தான்!” : சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு!
-
கர்நாடகாவால் மாசுப்படும் தென்பெண்ணை ஆறு : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குற்றச்சாட்டு!
-
வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு தி.மு.க MPக்கள் கேள்வி!
-
‘இண்டிகோ’ விமானங்கள் ரத்து செய்வதற்கு காரணம் என்ன? : உண்மையை எடுத்துச் சொல்லும் முரசொலி தலையங்கம்!