Sports
புறக்கணிக்கப்பட்ட தொடக்க போட்டி: INDvsPAK போட்டிக்கு தனி முக்கியத்துவம்.. BCCIக்காக நேர்மையை இழக்கும் ICC
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. ஆனால், இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறது. வழக்கமாக மார்ச்சில் இருந்து மே வரையான காலகட்டத்தில்தான் உலகக்கோப்பை நடைபெறும். ஆனால், ஐபிஎல் காரணமாக பிசிசிஐ மழை காலமான அக்டோபர் மாதத்தில் உலகக்கோப்பையை நடத்தியது.
அதேபோல உலகக்கோப்பையில் தொடக்க போட்டிக்கு வெகு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அந்த நாளில்தான் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதிய போட்டி எந்தவித தொடக்க நிகழ்ச்சியும் நடைபெறாமல் மிகவும் எளிமையான நடத்தப்பட்டது. இதன் காரணமாக ரசிகர்கள் யாரும் இன்று மைதானம் வெறிச்சோடு கிடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா -பாகிஸ்தான் மோதும் போட்டிகளை காண பல்வேறு நட்சத்திர நடிகர்கள் அழைக்கப்பட்டுள்ளதும், அந்த நாளில் இசை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளதும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி நடத்தும் தொடர்களில் அனைத்து அணிகளுக்கு சம அங்கீகாரம் கொடுக்கப்படும். ஆனால் தற்போது இந்திய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும், இந்தியா -பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் தனி முக்கியத்துவத்தை பிசிசிஐ வழங்குவது, அதற்கு ஐசிசி மெளனமாக சம்மதம் கொடுப்பதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!