Sports
ஆசிய விளையாட்டு : இந்திய அணிக்காக அறிமுகமாகி அசத்திய தமிழ்நாடு வீரர்.. அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா !
ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.கடந்த 2018-ம் ஆண்டு 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது.அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பொதுவாக ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் இடம்பெறாத நிலையில், இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்திய அணிக்கு பதக்கம் கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது.
அதற்கு ஏற்ப கடந்த வாரம் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் இந்திய அணி தரவரிசையில் முன்னிலையில் இருப்பதால் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நேபாளம் அணியை சந்தித்தது. இந்த தொடருக்கு ஐசிசி சர்வதேச அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், இந்த போட்டியின் மூலம் ஜிதேஷ் வர்மா மற்றும் தமிழ்நாடு வீரர் சாய் கிஷோர் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகினர்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடி தொடக்கம் வழங்கினார். அவருக்கு கேப்டன் ருதுராஜ் நிதானமாக ஆடி ஒத்துழைப்பு கொடுத்தார். எனினும் ருதுராஜ் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
எனினும் ஒருமுனையில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் சிவம் துபே, ரிங்கு சிங் அதிரடி காட்டியதால் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நேபாள அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தது.
இதனால் 20 ஓவர்களில் அந்த அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய தரப்பில் ஆவேஷ் கான் , பிஸ்நோய் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தமிழக வீரர் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
Also Read
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!