Sports
இந்திய அணியை எந்த அணியுடனும் ஒப்பிட முடியாது, அதற்கு காரணம் இதுதான் - பாக். ஜாம்பவான் கருத்து !
கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.
இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆசிய கோப்பை சர்ச்சை காரணமாக இந்த தொடரில் பங்கேற்க முதலில் மறுத்த பாகிஸ்தான் பின்னர் விளையாட சம்மதம் தெரிவித்தது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி குஜராத் தலைநகர் அஹமதாபாத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியை ஒப்பிடும் பொழுது பாகிஸ்தான் பலவீனமான அணிதான் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் கூறியுள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர், " இந்த உலகக்கோப்பையில், இந்தியாவிற்கு இணையாக பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த அணியும் இருக்க முடியும். இந்திய அணியிடம் நல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் நல்ல பெஞ்ச் வலிமை இருக்கிறது.
பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா இல்லாதது பெரிய பின்னடைவு அவர் புதிய பந்தில் ஷாகின் அப்ரிடி உடன் சேர்ந்து மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்து வந்தார். இந்தியாவுடன் ஒப்பிடும் பொழுது பாகிஸ்தான் பலவீனமான அணிதான். இதனால் அவர்கள் அழுத்தத்தில் இருப்பார்கள். ஆனால் இந்திய அணிக்கும் அழுத்தம் இருக்கும். ஏனென்றால் கூட்டத்தால் அழுத்தம் இரு அணிகளுக்கும் சம நிலையில் இருக்கும். இருப்பினும் அணியின் செயல் திறனின் அடிப்படையில் மதிப்பிட்டால் இந்தியாதான் முன்னிலையில் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !