Sports

3 மாதத்துக்கு பின்னர் அணியில் இடம்பிடித்து மீண்டும் காயமடைந்த வீரர்.. அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள் !

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

ஆனால், சில வாரங்களுக்கு முன்னர் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிலும் நடுவரிசை வீரர்களான கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்றோர் காயத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் காயமடைந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெறவில்லை. அதே போல இன்று நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் அவர் இடம்பெறவில்லை.

அவர் அணியில் இடம்பெறாததற்கு முதுகு பிடிப்பால் அவர் அவதிப்படுவதே காரணம் என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது நன்றாக இருக்கிறார் என்றாலும், அவருக்கு முதுகு பிடிப்பு முழுமையாக இன்னும் சரியாகவில்லை. இதனால் இந்திய அணியுடன் தற்போது அவர் இணைந்து விளையாடுவது கடினம். எனினும் அவர் விரைவில் அணியுடன் இணைவார் என கூறப்பட்டுள்ளது.

Also Read: ஜோதிடரின் அறிவுரைப்படி வீரர்கள் தேர்வு.. ஜாதகத்தை வைத்தே இந்திய கால்பந்து அணியில் இடம்.. அதிர்ச்சி தகவல்!