விளையாட்டு

ஜோதிடரின் அறிவுரைப்படி வீரர்கள் தேர்வு.. ஜாதகத்தை வைத்தே இந்திய கால்பந்து அணியில் இடம்.. அதிர்ச்சி தகவல்!

இந்திய கால்பந்து அணியின் வீரர்களை ஜோதிடரின் அறிவுரைப்படி தலைமைப் பயிற்சியாளர் தேர்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜோதிடரின் அறிவுரைப்படி வீரர்கள் தேர்வு.. ஜாதகத்தை வைத்தே இந்திய கால்பந்து அணியில் இடம்.. அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு ஆசியக் கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. ஆனால், இதற்கு காரணம் ஜோதிடர்களின் உத்வேகமூட்டல் என இந்திய கால்பந்துக் கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், ரூ.16 லட்சம் ஊதியத்தில் ஜோதிட நிறுவனம் ஒன்றிடம் இந்திய கால்பந்தின் ‘ஜாதகம்’ ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், அடுத்து வரும் ஆசியக் கோப்பை கால்பந்து தொடருக்காக அணிக்கு ஜோதிடர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,இந்திய கால்பந்து அணியின் வீரர்களை ஜோதிடரின் அறிவுரைப்படி தலைமைப் பயிற்சியாளர் ஈகோர் ஸ்டிமேக் தேர்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கிய செய்தி ஊடகம் வெளியிட்ட செய்தியில் இந்திய கால்பந்து அணி தேர்வு குறித்து டெல்லியை சேர்ந்த பூபேஷ் சர்மா என்ற ஜோதிடர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

indian team head coach Igor Stimac
indian team head coach Igor Stimac

மேலும், அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்த பட்டியலை இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ஜோதிடருக்கு இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஈகோர் ஸ்டிமேக் அனுப்புவார் என்றும், அதில் நட்சத்திரங்களை வைத்து ஜோதிடர் தேர்வு செய்யும் வீரர்களே அணியில் இடம்பெறுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு பயிற்சியாளர் ஈகோர் ஸ்டிமேக் மற்றும் ஜோதிடர் பூபேஷ் சர்மா ஆகியோருக்கு இடையே ஏராளமான உரையாடல்கள் நடந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலேயும், பிளேயிங் 11 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரரும் ஜோதிடர் பரிந்துரையின் பெயரிலேயே நடப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக திறமை வாய்ந்த முக்கிய வீரர்கள் முக்கிய போட்டிகளில் வெளியே அமரவைக்கப்பட்டதாகவும், இந்த செய்கைக்காக இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் ஜோதிடர் பூபேஷ் சர்மாவுக்கு 12 முதல் 15 லட்சம் வரை ஜோதிடருக்கு சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories