Sports
மிரட்டும் மழை.. பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதல்.. இன்றைய ஆட்டம் தொடருமா?
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் இலங்கை பல்லக்கலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 66 ரன்களுக்கே 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த கிஷன் 82 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 87 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பின் வரிசை வீரர்களும் தங்கள் விக்கெட்டுகளை விரைவில் இழக்க இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்க வந்தநிலையில், மழை பெய்து ஆட்டம் தொடரமுடியாத காரணத்தால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் நேபாளத்தை வீழ்த்திய இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
அதனைத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய துவக்க வீரர்கள் கில், மற்றும் ரோஹித் சர்மாசிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.
துவக்க ஜோடியாக 100 ரன்களை கடந்த இந்த ஜோடி, 121 ரன்கள் குவித்திருந்தபோது பிரிந்தது. ரோஹித் சர்மா 56 ரன்களுக்கும், கில் 58 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். 24.1 ஓவர்களுக்கு இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்திருந்தபோது மழை பெய்தது.
இதனால் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. எனினும் மழை விடாத காரணத்தால் போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரம் இன்றும் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், இன்றும் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!