அரசியல்

இந்தியா-பாரத் : “பிடிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்..” - பாஜக மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு!

பாரத் என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால் வெளிநாடு செல்லுமாறு மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் (Dilip Ghosh) கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-பாரத் : “பிடிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்..” - பாஜக மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக கடந்த ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது என அனைத்து கட்சித் தலைவர்களும் பேசியுள்ளனர்.

இதையடுத்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தியா-பாரத் : “பிடிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்..” - பாஜக மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு!

அதனைத் தொடர்ந்து ’இந்தியா’ என்ற பெயரை கேட்டாலே பாஜக தலைவர்கள் அலறி வருகின்றனர். முதன் முறையாக அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா, தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள INDIA என்ற பயோவை 'பாரத்' என்று மாற்றி "ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபட வேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக உழைப்போம். இது 'பாரதம்'. மோடி பாரதத்திற்கான பிரதமர்" என்று கூறினார்.

அதன் பின்னர் மோடி தீவிரவாத இயக்கங்களின் பெயரில் கூட இந்தியா இருக்கிறது என பயத்தில் கூறியிருந்தார். இதற்கு பாஜக எம்.பி, ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் எழுப்பி வருகிறது.

இந்தியா-பாரத் : “பிடிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்..” - பாஜக மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு!

தொடர்ந்து இந்தியா என்ற பெயரை கண்டு பாஜகவினர் பெரும் அச்சத்தில் உள்ளதன் எதிரொலியாகத்தான் இந்தியா என்ற பெயரை மாற்றி பாரதம் என வைக்க வேண்டும் என்று பாஜக கும்பல் வலியுறுத்தி வருகிறது. மேலும் இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பினாலும், பாஜக ஆதரவாளர்கள் பாரதம் என பெயர் மாற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது, பிரதமர் மோடி முன் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில், 'இந்தியா' என்பதற்கு பதில் 'பாரத்' என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் குடியரசு தலைவர் விருந்து அழைப்பிதழில் கூட பாரத் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது நாடு முழுவதும் கடும் கண்டனங்களை எழுப்பியது.

இந்தியா-பாரத் : “பிடிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்..” - பாஜக மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு!

இந்த சூழலில் மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் (Dilip Ghosh), "இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று விரைவில் மாற்றப்படவுள்ளது. பாரத் என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால் வெளிநாடு செல்லுங்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததும் கொல்கத்தாவில் இருக்கும் வெளிநாட்டவர்களின் சிலைகள் அகற்றப்படும். அதற்கு பதிலாக பகீரதர் மற்றும் சங்கராச்சாரியார் சிலைகளை அவர்கள் இடத்தில் அமைப்போம்

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டை அடிபணிய வைத்த முகலாயர், போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர் ஆட்சியை நினைவுபடுத்தும் அனைத்து பெயர்களையும் நாடு முழுவதும் மாற்றி வருகிறோம். எங்களைத் தடுக்க யாருக்கும் தைரியம் இல்லை." என்று பேசியுள்ளார். பாஜக மூத்த தலைவர் இவ்வாறு பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத் திருத்த எதிர்ப்பின்போது, "இந்தியாவில் ஊடுருவியுள்ள 50 லட்சம் இஸ்லாமியர்கள் விரட்டப்படுவர்." என்று பா.ஜ.க மூத்த தலைவர் திலீப் கோஷ் பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories