Sports
”இந்திய அணியில் தமிழ்நாடு வீரர்கள் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது” - இந்திய வீரர் நடராஜன் கருத்து !
தமிழ்நாடு வீரர் நடராஜன் TNPL தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காயமடைந்தார்.
பின்னர் கடந்த ஐபில் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். எனினும் அடுத்தடுத்து அவர் காயம் அடைந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அணியில் இடம்பிடிப்பார் என கூறப்பட்ட நிலையில், இந்த தொடரிலும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். எனினும் அவர் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பது வருகின்றனர்.
இந்த நிலையில், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர்கள் இடம்பெறாதது வருத்தத்தை ஏற்படுத்தியதாக நடராஜர் கூறியுள்ளார். தனது சொந்தஊரான சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், " உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் போட்டிகள் நடப்பதால் கோப்பையை நாம் வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் இந்திய அணி மீண்டும் கோப்பை வெல்லும் நேர நம்பிக்கை இருக்கிறது.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எப்போதும் குறைந்தபட்சம் ஒருவராவது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அணியில் இருப்பார். ஆனால், தற்போது இல்லாதது வருத்தமாக இருக்கிறது. அதிலும் அணியில் அஸ்வின் இல்லாதது எல்லோரையும் போல எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“சீரழியும் சிறைத்துறை... கண்டுகொள்ளாத நிர்மல்குமார்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!